சகல பாவங்களும் நீங்க சக்கரஸ்நானம் / பகுதி - 3
திருப்பங்களை தந்தருளும் திருப்பதி
யாரும் அறியப்படாத திருப்பதி தகவல்கள் - 3
திருமலை
திருப்பதி சுவாமி புஷ்கரணி
![]() |
| சுவாமி புஷ்கரணி |
சுவாமி புஷ்கரணி என்பது, இந்த பூமண்டலத்திலேயே புனிதமான தீர்த்தம் என்றும், வைகுண்ட துவாதசி அன்று பூமண்டலத்தில் இருக்கும் அத்தனை புண்ணிய நதிகளில் இருந்தும், புண்ணிய தீர்த்தங்களில் இருந்தும் சக்தி, இந்த சுவாமி புஷ்கரணியில் கலக்கும் என்றும்,
இதற்கு சுவாமி புஷ்கரணி தீர்த்தம் என்று பெயரிட்டு, அன்று சக்கரஸ்நானம் நடைபெறுகிறது. இந்த சக்கரஸ்நானத்தின்போது , சுவாமி புஷ்கரணியில் குளிக்கும் பக்தர்களுக்கு, எத்தனையோ ஜென்மங்களுடைய பாவங்கள் எல்லாம் நசித்து, அபாரமான புண்ணிய ராசிகள் சங்கமிக்கும் என்றும், ஸ்வாமியின் அருள் கிட்டும் என்பதும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட உண்மை.
என்று சொல்லப்பட்ட புனிதமான புஷ்கரணியில், பக்தர்கள் சக்கரஸ்நானத்தின் பொழுது ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி, சுவாமியின் அருளால் பாவங்களை நீக்கி புண்ணியங்களைப் பெறுவதற்கு இது மிகவும் விசேஷமான ஒரு வாய்ப்பு.
திருமலை திருக்கோயில் அமைந்திருக்கும் மலைத் தொடரில் மிகவும் புனிதமான ஆறு கோடி தீர்த்தங்கள் இருப்பதாக, சொல்லப் பட்டிருக்கிறது. இந்த ஆறுகோடி தீர்த்தங்களில் முக்கியமான தீர்த்தங்களில் சில, மனிதர்கள் சென்று தரிசிக்கக்கூடிய நிலையில் இருக்கிறது. அவைகளை அடுத்த தொகுப்பில் காணலாம்.
அறியப்படாத தகவல்கள் தொடரும்...
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027





கருத்துகள்
கருத்துரையிடுக